சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு ஹால் ஆப் பேம் விருது வழங்கி கவுரவித்த – ஐ.சி.சி

Sachin

ஐசிசி மிக உயரிய விருதான “hall of fame” இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை ஐசிசி சச்சினின் சாதனைகளை தொகுத்து இந்த விருதினை வழங்கியுள்ளது.

 

sachin 1

இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 15 ஆயிரத்து 921 ரன்களை குவித்துள்ளார். மேலும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் அதுமட்டுமின்றி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய சாதனைகளை சச்சின் வைத்துள்ளதை icc குறிப்பிட்டது.

மேலும் ஒரு மிகச்சிறந்த வீரர் கிரிக்கெட் விளையாடி எந்த ஒரு பிரச்சனையும் சிக்காமல் அவர் ஓய்வு பெற்று நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்து ஐசிசியின் கௌரவமான விருது வழங்கப்படும் அந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு தற்போது ஹால் ஆப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் வீரர்களான கவாஸ்கர், கும்ப்ளே, கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் இதற்கு முன்னர் ஹால் ஆஃப் பேம் விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.