2011 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ஏற்பட்ட பெரிய சிக்கல். தீர்த்துவைத்த சச்சின். சிக்னல் கொடுத்த தோனி – யாரும் அறியா செய்தி இதோ

2011-final

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சொன்ன ஒரு தேர்வு அதிர்ஷ்டவசமாக இந்திய அணி கோப்பையை வெல்ல உதவியிருக்கிறது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப்போட்டி வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றது.

Gambhir-1

இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆசிஸ் நெஹரா மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அதற்கு முன்னதாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தது. மேலும் எப்போதும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தது. இதனால் கடைசி போட்டியில் எவ்வாறு பந்துவீச்சாளர்களை களமிறக்குவது என்ற சிக்கல் ஏற்பட்டது.

இந்த இருவரும் காயம் அடைந்ததால் ஜாகிர் கான் மற்றும் முனாப் படேல் ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். மூன்றாவதாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை, ஆனால் மீதம் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆவார். அவரை இறக்குவது கடினம் ஏனென்றால் அப்போது அஷ்வின் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமான தருணம் அப்போது அனுபவம் இல்லாத வீரரை இறக்குவது என்பது நல்ல யோசனை கிடையாது. இதனால் சச்சின் டெண்டுல்கர் ஒரு யோசனை சொன்னார்.

Srisanth 1

வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்தை இறுதிப் போட்டியில் களமிறக்கலாம் என்று முடிவு செய்து அணி பயிற்சியாளரிடமும் தோனியிடமும் கூறினார். ஆனால் அந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் 5 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் ஸ்ரீசாந்த். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கையில்லாமல் வீரர்கள் இருந்தனர். இதனால் மீதமிருந்த போட்டிகளில் களமிறக்கப்படாமல் இருந்தார்.

- Advertisement -

ஆனால் அவர்மீது சச்சின் வைத்திருந்த நம்பிக்கையை ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆதரவு அளிக்க டோனி அவரை களமிறக்கினார். அந்த போட்டியில் 8 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்தார் ஸ்ரீசாந்த். ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. ஆனால் இது இந்திய அணிக்கு பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

Srisanth

அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக ஸ்ரீசாந்த் இருந்த உலக கோப்பை இறுதிப் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கூட கடைசி கேட்சை ஸ்ரீசாந்த் பிடித்தது குறிப்பிடத்தக்கது.