5 நிமிட மணி அடிக்கும் சச்சின்..! லார்ட்ஸ் மைதானத்தில் சச்சினிக்கு கிடைத்த கெளரவம்..!

sachin bell

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில்  தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியை இந்தியாவை சேர்ந்த முன்னாள் நச்சத்திர ஆட்டக்காரர் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மணி அடித்து துவங்க உள்ளார்.

sachinn

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா முதல் வெற்றி பெரும் முன்னைப்பில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி உள்ளது.

பெரும்புகழ் பெற்ற இந்த லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து ஒரு நடைமுறை உள்ளது அதாவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு சரியாக 5நிமிடத்திற்கு முன்னாள் மணியை அடித்து போட்டியை துவங்குவார்கள்.இந்த மணியை புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து போட்டியை துவங்கி வைப்பார்கள்.

lords bell

இதற்குமுன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 5 நிமிட மணி அடித்து போட்டியை துவக்கியுள்ளனர்.சச்சினுக்கு முன் கபில்தேவ் சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல்டிராவிட் கங்குலி போன்ற முன்னாள் சிறந்த வீரர்கள் 5நிமிட மணியை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.