நான் முக்கியமில்லை. சச்சினின் முதல் காதல் இதுதான் – சச்சின் மனைவி வெளியிட்ட தகவல்

Anjali

காதலர் தினமான இன்று உலகெங்கும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி காதலர்கள் தங்களது காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் மற்றும் சமூக புள்ளிகளும் தங்களது மனைவி, காதலி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றினை பதிவிட்டு அதனை தன் முதல் காதல் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சச்சினின் மனைவியான அஞ்சலி ஒரு பேட்டியில் கூறுகையில் :அவருடைய முதல் மனைவி என்றும் கிரிக்கெட் தான் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய முதல் காதலும் கிரிக்கெட் தான் அதன் பின்புதான் நான் என்று கூறியிருந்தார். இப்போது இதனை சச்சின் வீடியோ பதிவாக விட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார். சர்வதேச ஓய்வுக்குப் பிறகும் தான் வைத்திருக்கும் கிரிக்கெட் மீதான காதலை இன்று அவர் அறிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியிலும் புஷ் பயர் போட்டிக்காக அவர் இறங்கி விளையாடியது ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.