தொடரும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு. சச்சின் செய்த மாபெரும் உதவி – எவ்வளவு தொகை தெரியுமா ?

Sachin
- Advertisement -

கடந்த வருடம் இந்தியாவில் கொரானா தொற்று வேகமாக பரவி வந்ததால் மார்ச் மாதம் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இப்பொது முடக்கத்தின் காரணமாக கொரானா தொற்றின் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. எனவே பொது முடகத்தில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இப்போது மீண்டும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருவதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்திய மருத்துவமனைகளில் படுக்கை வசதியும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

Corona-1

- Advertisement -

இந்தியாவின் இந்நிலையைக் கண்ட மற்ற உலக நாடுகள் தாங்களாகவே முன்வந்து இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த நன்கொடையை இந்தியாவிற்கு வழங்கி கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரனா நிதியுதவியாக ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இத்தொகைய அவர், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க, இளம் தொழிலதிபர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஆக்ஸிஜன் இந்தியா என்ற அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், அதில்

தற்போது இந்தியாவில் பரவிவரும் கொரானாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட் மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பரிதவிப்பதை பார்க்கும்போது எனக்கு மனம் வலிக்கிறது. நமது நாட்டின் மருத்துவத்துறை கொரானாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்ய முடியாததால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளகியுள்ளது. எனவே இதனை சரிசெய்ய இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஆக்ஸிஜன் கான்சன்டிரேட்டர் வாங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். விரைவில் இவர்களது சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்றடையும் என நம்புகிறேன். நான் கிரிக்கெட் விளையாடும்போது இந்திய மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். தற்போது கொரானாவை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம் என அந்தப் பதிவில் சொல்லியிருக்கிறார்.

Lee

இதற்கு முன்பு கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரராக இருக்கும் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலர்களை பிஎம் கேர் ஃபண்டிற்கு நிதியாக வழங்கியருந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ ரூபாய் 41 லட்த்தை நன்கொடையாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement