இவர் மட்டும் பழையபடி ஆட ஆரம்பிச்சா டி20 உலகக்கோப்பை நமக்கு தான் – சபா கரீம் நம்பிக்கை

Karim
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடரானது இங்கு நிலவி வரும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் ஐ.பி.எல் தொடர் முடிந்த சில தினங்களிலேயே இந்த தொடரானது நடைபெறவுள்ளது.

cup

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியிலும் பல இளம் வீரர்களுக்கு சோதனை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களின் சிலரும் இந்த டி20 தொடரில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் முன்னர் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்த இரண்டு சுற்று பயணத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி சற்று பலமான அணியாக டி20 கிரிக்கெட்டில் பார்க்கப்படும் வேளையில் ஒரு வீரர் மட்டும் பார்மிற்கு வந்தால் இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்ல இரட்டிப்பு வாய்ப்பு இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியாவிற்கு இலங்கை தொடர் சற்று சவாலாக இருக்கும். ஐபிஎல் தொடரின்போது சென்னை மைதானத்தில் அவர் பேட்டிங் செய்ய சற்று சிரமப் பட்டார். அதேபோன்ற தன்மையுடன் தான் இலங்கை மைதானங்களும் இருக்கும். அங்கு அவர் சமாளித்து விட்டால் மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்.

pandya

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டையும் பலமாக்கி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டால் நிச்சயம் அது டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவும் என சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement