அவருக்கு என்ன காயம் ஏற்பட்டது ? உங்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா ? – சபா கரீம் விளாசல்

Karim

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்க உள்ளது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் துவக்க வீரர் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தனது முதல் சிகிச்சையை இங்கிலாந்தில் செய்யும் அவர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இருப்பினும் அவரது காயம் காரணமாக முழு விவரங்கள் வெளியாகாத நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஓபனராக முதல் தேர்வாக இருந்த கில் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்ன என்றும் அவரது காயம் குறித்தும இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரிம் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

gill 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டி என மிகப்பெரிய தொடரில் எப்படி தன்னுடைய காயத்தை கில் மறைத்திருப்பார் அதுமட்டுமின்றி வீரர்களின் உடற்தகுதி சோதனை செய்யும் மருத்துவர்கள் கூட இதனை கண்டறிய முடியவில்லையா ? என்று சபா கரீம் கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்தப் பெரிய தொடரில் அவர் காயத்தை மறைத்து அணியில் பங்கேற்று இருக்க முடியாது. அப்படி அவர் செய்து இருப்பாராயின் அவர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்றும் இதனை அணியில் உள்ள மருத்துவர்கள் யாராலும் கண்டறிய முடியவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றும் சபா கரிம் இந்திய நிர்வாகத்தையும், இளம் வீரர்களையும் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement