இவர் ஒருத்தரோட விக்கெட் எடுத்தா போதும். நியூசியை ஈஸியா ஆல் அவுட் பண்ணிடலாம் – சபா கரீம் பேட்டி

Karim

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணியானது இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. அதன்படி கடந்த 2ஆம் தேதி தொடங்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் புதுமுக வீரரான டெவான் கான்வே தனது முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

INDvsNZ

நியூசிலாந்து அணியின் சொதப்பலான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று கருத்து தெரிவித்து உள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம். இதுகுறித்து பேசிய அவர், நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகவும் வலுவற்றதாக உள்ளது.

- Advertisement -

அந்த அணியில் உள்ள இந்த பிரச்சனை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கூடுதலான அட்வான்ட்டேஜைக் கொடுக்கும் எனக் கூறிய அவர், நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனை மட்டுமே நம்பியுள்ளது என்றும் கூறியிருக்கிறார். இது பற்றி கூறிய அவர், இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளிலுமே சில பிரச்சனைகள் உள்ளது.

williamson

ஆனால் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் படு மோசமானதாக காணப்படுகிறது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் மிகப் பெரிய பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவரை மட்டும் விரைவிலேயே வீழ்த்தி விட்டால், நியூசிலாந்து அணியை மிக எளிமையாக ஆல் அவுட் எடுத்துவிட முடியும். இது இந்திய அணிக்கு மட்டுமல்ல மற்ற அனைத்து அணிகளுக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

INDvsNZ

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சபா கரீம் கூறியது போலவே, கேன் வில்லியம்சன் அவுட்டானதும் அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இந்த போட்டியில் 288 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்து அணி அடுத்த 6 ரன்களை அடிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் இந்த வீக்னஸை இந்திய அணியின் பவுலர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்களா என்பதை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நாம் காணலாம்.

Advertisement