அஷ்வின் ஒரு மேட்ச் வின்னர் அவரை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை – முன்னாள் வீரர் வேதனை

Ashwin
- Advertisement -

ஜடேஜாவுக்கு பதிலாக ஆஸ்திரேலியப் பயணத்தில் கலந்து கொண்ட அஸ்வின் அங்கிருந்து இன்றுவரை தனது திறமையைத் தொடரந்து நிரூபித்து வந்த வண்ணம் இருக்கிறார். பேட்டிங் , பவுலிங் என அஸ்வினின் திறமை நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே போகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்துவீச்சும், பேட்டிங்கும் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.ஆஸ்திரேலிய தொடரில் 12 விக்கெட்டுகளை அபாரமாக அஸ்வின் வீழ்த்தியிருந்தார்.

Ashwin

- Advertisement -

பின்னர் அதே ஃபார்முடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்திய அஸ்வின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கூடுதலாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.பின்னர் அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஷ்வின் குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் , “அஸ்வின் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் ஆவார்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அஸ்வினுக்கு போதுமான வாய்ப்பும் அங்கீகாரமும் இந்திய அணி சரியாக அளிக்கப்படவில்லை.இன்னும் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.அதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வந்து இருக்கிறேன்.

Ashwin

வெளியூர் சுற்றுப்பயணங்களின் போது ஒருசில போட்டிகளில் சொதப்பினால் போதும், அடுத்தடுத்து அவர் நிராகரிக்கப்படுவார்.இது மிக தவறான செயல் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஏன் அவறை ஆண்டாண்டு காலமாக புறக்கணித்து வருகின்றனர் என்று சுத்தமாக புறியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

ashwin

மேலும் இன்று ஒரு மேட்ச் வின்னராக அவர் வளர்ந்தள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.கட்டாயம் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

Advertisement