
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற எந்தெந்த வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் உதவியது? என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் இந்த டி20 தொடரை இந்திய அணி கைப்பற்ற யார் காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 தொடரை பொருத்தவரை இந்திய அணிக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்று கூறுவேன். ஏனெனில் ஒரு போட்டியில் கூட அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணிக்காக அவர் மிகச் சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் மட்டும் சரியாகவில்லை விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் பலம் 40 முதல் 45 சதவீதம் வரை குறையும். 2024 டி20 உலக கோப்பை வென்றபோதும் அவரது ஓவர்கள் மிக முக்கியமாக இருந்தன.
இதையும் படிங்க : என்னோட பேட்டை வச்சி அபிஷேக் அரைசதம் அடித்ததில் ஹேப்பி – சுவாரசிய தகவலை பகிர்ந்த இந்திய வீரர்
அதேபோன்று தற்போது 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். அவர் கூறியது போலவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து 14 விக்கெட்டுகளுடன் பும்ரா முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.