டி20 அணியில் விராட் கோலி எங்கே விளையாடினாலும் எதிரணி பயப்படும் – முன்னாள் இந்திய வீரர் ஓப்பன்டாக்

Advertisement

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதால் எப்போது சதமடிப்பார் என்ற விவாதங்கள் எழுந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல எப்போது சதமடிப்பார் என்ற விவாதங்களை விட்ட சில முன்னாள் இந்திய வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மறந்து விமர்சித்தார்கள். இருப்பினும் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து விளையாடிய அவர் ஒரு மாதம் ஓய்வெடுத்து 2022 ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி பழைய பார்மை மீட்டெடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியான சதம் விளாசினார். அதனால் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்த அவர் 3 வருடங்களாக வராமல் அடம் பிடித்த 71ஆவது சதத்தையும் விளாசி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

Virat Kohli

அதனால் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து நீக்குமாறு கூறிய அதே முன்னாள் வீரர்கள் கைதட்டி பாராட்டும் நிலைக்கு வந்துள்ளார்கள். அதைவிட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்தால் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 200 ஸ்டிரைக் ரேட்டில் 122* (61) ரன்களை விளாசி பார்முக்கு திரும்பினார். அதனால் விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்ற புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஓப்பனிங்கில் விராட்:
ஐபிஎல் தொடரில் இதற்கு முந்தைய காலங்களில் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் தொடக்க வீரர்களாக களமிறங்கி வெற்றிகரமாக செயல்பட்ட விராட் கோலி 2016 சீசனில் யாருமே மறக்க முடியாத 973 ரன்களை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தான் எடுத்தார். அதே போல் தற்சமயத்தில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் கேஎல் ராகுல் பார்மின்றி தவிப்பதுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பின்னடைவை ஏற்படுத்துகிறார். அதனால் எழுந்துள்ள இந்த கோரிக்கைக்கு சில முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலானவர்கள் அவருக்கு மிகவும் பிடித்த 3வது இடத்தில் விளையாட வேண்டுமென்றே கூறுகிறார்கள்.

Rohith-1

இந்நிலையில் விராட் கோலி எங்கு விளையாடினாலும் எதிரணிக்கு பயம் இருக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் டி20 அணியில் அவரை சுற்றி தான் டாப் ஆர்டர் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அதாவது இந்திய டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, ராகுலை விட விராட் கோலி தான் முக்கியமானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தி பின்வருமாறு.

- Advertisement -

“ஆரம்பத்தில் சந்திக்கும் பந்துகளுக்கு தகுந்த ரன்களை எடுத்தாலும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடும் திறமையை விராட் கோலி பெற்றுள்ளார். எனவே இந்திய அணியின் இதர பேட்ஸ்மேன்களும் அவரை சுற்றி பெரிய ஷாட்களை அடிக்க முயற்சிக்கும் தற்போதைய புதிய அதிரடி பாதை சரியானதே. எப்போதும் போட்டியின் அனைத்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை உட்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் விளையாடும் பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் அதீத அனுபவமுள்ள விராட் கோலி எந்த இடத்திலும் விளையாடும் திறமை பெற்றுள்ளார்”

Karim

“மேலும் ஆசிய கோப்பைக்கு முன்பாக தற்போதைய புதிய அதிரடி அணுகுமுறையை வைத்து நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே ஒருசில தவறுகளை திருத்திக் கொண்டால் நாம் தொடர்ந்து பயணிக்க தயாராகவே உள்ளோம். மேலும் டாப் ஆர்டரில் விராட் கோலி எந்த இடத்தில் விளையாடினாலும் எதிரணிக்கு இருக்கும் பயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. எனவே அவருடன் சேர்த்து ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயற்படுவதற்காக அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

அதாவது ஓப்பனிங் அல்லது 3வது இடம் என எங்கு விளையாடினாலும் விராட் கோலி இந்திய அணியில் இருப்பது நிச்சயம் எதிரணிக்கு எப்போதும் கலக்கத்தை கொடுக்கும் என்று சபா கரீம் கூறியுள்ளார். மேலும் எந்த இடத்திலும் விளையாடும் திறமை பெற்றுள்ள அவர் ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை பெற்றாலும் இறுதியில் அதை இருமடங்கு அதிரடியாக விளையாடி ஈடுகட்டும் திறமை பெற்றுள்ளதாகவும் பாராட்டியுள்ளார். எனவே அவரது பேட்டிங் இடத்தைப் பற்றி கவலைப்படாமல் டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்குமாறு அணி நிர்வாகத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement