- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த அரைகுறை வாய்ப்பு எதற்கு? அணியை உருவாக்கிய ரோஹித்தை மொத்தமா வீட்டுக்கு அனுப்பலாமே? சபா கரீம்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை பந்தாடிய இந்தியா 11 தொடர்ச்சியான வெற்றிகளுடன் ஃபைனல் வரை சென்று அசத்தியது.

2024 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளை உடைத்து சாதனைப் படைத்தது. அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஜோடியாக ஓய்வு பெற்றனர். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய அவர் பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

அரைகுறை வாய்ப்பு எதற்கு:

இதற்கிடையே ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோஹித் சர்மா தலைமையில் 12 வருடங்கள் கழித்து இந்தியா வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் செமி ஃபைனலில் விராட் கோலியும் ஃபைனலில் ரோஹித் சர்மாவும் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர். அதனால் 2027 உலகக் கோப்பையில் விளையாடி அவர்கள் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் 2027இல் அவர்களால் 38, 40 வயதில் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கியுள்ளது. இதனால் 2027 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் கேப்டனாக இல்லையெனில் எதற்காக அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? என்று முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மொத்தமாக அனுப்புங்க:

தம்மைப் பொறுத்த வரை தற்போதைய இந்திய அணியை உருவாக்கிய ரோஹித் கேப்டனாக செயல்படத் தகுதியுடையவர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பைக் கொடுக்காத தேர்வுக்குழு பேசாமல் மொத்தமாக ரோகித்தை கழற்றி விடலாமே என்று அவர் சாடியுள்ளார். இது பற்றி சபா கரீம் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியைக் கட்டமைத்த ரோஹித் உங்களுக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றார்”

இதையும் படிங்க: ஜடேஜா என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? கில் மாதிரியே அசத்திய லெஜெண்ட்ங்க.. அகர்கரை சாடிய ரமேஷ்

“ரோஹித் கேப்டனாக இல்லை என்பது அவரிடம் நீங்கள் வருங்காலத்தைப் பார்க்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 2027 உலகக் கோப்பையில் அவர் அங்கமாக இருப்பார் என்று நீங்கள் கருதவில்லை. அப்படிப்பட்டவரை ஏன் நீங்கள் அணியில் வைத்திருக்கிறீர்கள்? 2027 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று கருதுபவரை அணியிலும் வைக்காதீர்கள்” என்று காட்டமாக கூறினார்.

- Advertisement -