- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பிரச்சனையை அவர் தீர்ப்பாரு.. ஜிம்பாப்வே தொடரில் சரியா யூஸ் பண்ணனும்.. சபா கரீம்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக் ஆகியோர் முதல் முறையாக இந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். முன்னதாக இந்திய அணியில் டாப் பேட்ஸ்மேன்கள் யாருமே பகுதிநேர பவுலர்களாக இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சச்சின், சேவாக் போல தற்போதுள்ள அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் இக்கட்டான சூழ்நிலையில் பந்து வீசுவதில்லை.

- Advertisement -

சரியான வீரர்:
இந்நிலையில் அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக களமிறங்குவதுடன் ஸ்பின்னராக செயல்படும் திறமையை கொண்டுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கூறியுள்ளார். எனவே அபிஷேக்கை சரியாக பயன்படுத்தினால் இந்திய அணியின் பிரச்சனையை தீர்க்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“பேட்டிங்கில் மட்டுமல்லாமல் அவரால் இடது கை ஸ்பின்னராகவும் அசத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். எனவே இந்திய அணியில் அவரால் ஆல் ரவுண்டர் இடத்தையும் நிரப்ப முடியும். அது அவருக்கும் நல்லது. ஒருவேளை வாய்ப்பு பெற்றால் துவக்க வீரராக களமிறங்குவது அவருக்கு பொருத்தமாக இருக்கும். அதே போல அவரால் பந்து வீச்சில் ஒரு சில ஓவர்கள் வீச முடியும். அது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கும்”

- Advertisement -

“இருப்பினும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அவரிடம் இதையே எதிர்பார்க்கிறது என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் உள்ளூர் தொடர்களில் அந்த இடத்திலேயே அவர் வாய்ப்பு பெற்று வளர்ந்தார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காகவும் சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காகவும் அவர் துவக்க வீரராகவே விளையாடினார்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க.. 2028இல் இளம் வீரர்களான விராட், ரோஹித் விளையாடுவாங்க.. டிராவிட்டிடம் பேசிய மோடி

“எனவே அபிஷேக் சர்மாவிடம் உள்ள பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் தம்முடன் அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக களமிறங்குவார் என்று கேப்டன் சுப்மன் கில் முதல் போட்டிக்கு முன்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனவே அபிஷேக் ஷர்மாவுக்கு பேட்டிங் வாய்ப்பு உறுதியான நிலையில் பவுலிங் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -