தோனியின் ஓய்வுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பி.சி.சி.ஐ இதை செய்தாக வேண்டும் – சபா கரீம் பேட்டி

Dhoni
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தான் ஓய்வு பெற்ற பிறகும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தில் இருக்கும் தோனிக்கு சரியான வழி அனுப்பும் போட்டி இல்லை என்பதே ரசிகர்களிடம் ஒரு குறையாக இருந்து வருகிறது. இருப்பினும் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Dhoni

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரது ஜெர்சி நம்பருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றதுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரது ஜெர்சி நம்பருக்கு ஓய்வு தர வேண்டும் என்றும் மேலும் அவரைப் போல பல இந்திய முன்னாள் வீரர்களின் ஜெர்சி நம்பர்களுக்கு ஓய்வு தர வேண்டும் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றாலும் இன்னும் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் ஆற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த போது சரியான வழி அனுப்பும் போட்டி நடைபெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கும் வேளையில் பிசிசிஐ வழி நடத்தும் போட்டியை இதுவரை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement