- Advertisement -
உலக கிரிக்கெட்

டிராவில் முடிந்த தெ.ஆ மற்றும் இலங்கை போட்டி – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது யார் தெரியுமா ?

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை அடித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக மென்டிஸ் 41 ரன்கள் அடித்தார்.

பிறகு 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் சரிவை சந்தித்த தென்னாப்பிரிக்க அணியை மில்லர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். அவர் 23 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இருப்பினும் இறுதி கட்ட ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் அடைந்ததால் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 134 ரன்களை குவித்தது இதனால் ஆட்டம் டையில் முடிந்தது.அடுத்து சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரரான மில்லர் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து 14 ரன்கள் சேர்த்தார்.

பிறகு 15 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வெறும் 5 ரன்கள் அடித்தது இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த சூப்பர் ஓவரை தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் தாஹிர் வீசினார்.

- Advertisement -
Published by