தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே சொந்த மண்ணில் தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடுகிறது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 247/6 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தாவில் கடந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் முக்கிய காரணமானது. அதனால் இந்திய அணி மீது முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களே கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.
கொல்கத்தாவை விட:
அந்த நிலைமையில் இப்போட்டியின் பிட்ச் முதல் நாளில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமானதாக இருந்தது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் இம்மாதிரியான பிட்ச்சுகள் தான் வருங்காலங்களில் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளின் டெம்ளேட் பிட்ச்சாக இருக்குமென்று துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் தெரிவித்துள்ளார். ஏனெனில் கொல்கத்தாவில் இருந்த பிட்ச்சை தாங்களும் விரும்பவில்லை என்று அவர் கூறியவர்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில், ஒரு போட்டியில் யார் வெல்லப் போகிறார் என்பதை பிட்ச் தீர்மானிப்பது அரிதாகவே நடக்கும். ஒருவேளை நாங்கள் கொல்கத்தாவில் இன்னும் நன்றாக விளையாடியிருந்தால் அந்தப் பிட்ச்சிலும் இந்தியா வென்றிருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் சமீபத்திய போட்டிகளின் முடிவுகளை நீங்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்”
கௌகாத்தி பிட்ச் நல்லாருக்கு:
“எனவே இந்த (கௌகாத்தி) பிட்ச் வேண்டுமானால் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக பொருந்தலாம். அது இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்ச்சுகளை காட்டிலும் எங்களுடைய டெம்ப்ளேட்டுக்கு நெருக்கமாக இருக்கிறது. நீங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று வெற்றி பெறுவதற்காக போராட வேண்டும். அதற்கு நீங்கள் போட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”
இதையும் படிங்க: அடம் பிடிக்காம மூளையை யூஸ் பண்ணி.. இதை செய்யலன்னா ஜெய்க்க முடியாது.. இங்கிலாந்தை சாடிய வாகன்
“கௌகாத்தி பிட்ச் கொல்கத்தாவில் இருந்ததை விட மாறுபட்டதாக இருக்கிறது. கொல்கத்தாவில் நாங்கள் இன்னும் நல்ல பிட்ச்சை எதிர்பார்த்தோம். ஆனால் அது வாழ்வற்றதாக இருந்தது. அதே சமயம் கௌஹாத்தியிலும் ஸ்கோர் செய்வது கடினமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் சொன்னதை நான் கேட்டேன். இது பழைய காலத்து நல்ல கலாச்சாரம் மிகுந்த டெஸ்ட் பிட்ச்” என்று கூறினார்.



