பவர்பிளே ஓவர்களிலேயே 4 விக்கெட். துவண்டு போன சி.எஸ்.கே வை தூக்கி நிறுத்திய – இளம்வீரர்

Ruturaj
Ruturaj Gaikwad
- Advertisement -

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கிய சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியின் முதலாவது பாதி முடிவடைந்துள்ளது. இந்த இன்னிங்சில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய சென்னை அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து அதிர்ச்சியை சந்தித்தது. இந்த துவக்கம் அனைவரையும் கதிகலங்க வைத்தது என்றே கூறலாம்.

cskvsmi

- Advertisement -

ஏனெனில் முதல் ஓவரின் போது டூபிளெஸ்ஸிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், 2-வது ஓவரில் மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமலும், மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில் சுரேஷ் ரெய்னாவும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதற்கிடையே அம்பத்தி ராயுடுவும் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேற துவக்க வீரர் ருதுராஜ் தோனியுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த போட்டியிலாவது தோனி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனியும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக பவர்பிளே ஓவர்களுக்குள் சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

milne

இப்படி சென்னை அணி சிக்கி இருக்கும் போது யார் மீட்டு எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் ருதுராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஜோடி சிறப்பாக விளையாடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 81 ரன்களை சேர்த்தது, அப்போது 26 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் பிராவோ 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

ruturaj 1

பின்னர் இறுதி நேரத்தில் தனது அதிரடி காண்பித்த துவக்கவீரர் ருதுராஜ் கெய்க்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 58 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 88 ரன்களை தனி ஒருவராக குவித்து அணியை நல்ல ரன் குவிப்பிற்கு கொண்டு சென்றார். இறுதியில் சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement