- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை: 18/5 டூ 239.. வெற்றிக்கு நிகராக தனது அணியை தூக்கிய ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் துவங்கியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய மகாராஷ்டிரா அணிக்கு பிரிதிவி ஷா, அர்சின் குல்கர்ணி, சித்தேஷ் வீர், கேப்டன் அன்கிட் பாவ்னே ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். அதனால் 5/4 எனத் தடுமாறிய மகாராஷ்டிரா அணிக்கு சௌரப் நாவ்லே 12 (23) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதன் காரணமாக 18/5 என மீண்டும் தடுமாறிய மகாராஷ்டிரா 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தூக்கிய ருதுராஜ்:

அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் நங்கூரமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜலஜ் சக்சேனா 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தம்முடைய அணியை ஓரளவு காப்பாற்றி 49 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து கேரளா பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு தம்முடைய அணியைத் தூக்கி நிறுத்திய ருதுராஜ் அரை சதத்தை அடித்து 11 பவுண்டரியுடன் 91 (151) ரன்கள் குவித்து அவுட்டானார்.

லோயர் ஆர்டரில் அவர்களுடைய போராட்டத்தை வீணடிக்காமல் விக்கி ஓஸ்ட்வால் 38, ராமகிருஷ்ண கோஸ் 31 ரன்கள் எடுத்தனர். அதனால் தப்பிய மகாராஷ்டிரா 239 ரன்களை எடுத்த நிலையில் கேரளாவுக்கு அதிகபட்சமாக நித்தீஷ் 5, பேசில் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய கேரளாவை சிறப்பாக பந்து வீசிய மகாராஷ்டிரா 219க்கு ஆல் அவுட்டாக்கியது.

- Advertisement -

ஆட்டநாயகன் ருதுராஜ்:

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 54, சல்மான் நிஷார் 49, கேப்டன் அசாருதீன் 36 ரன்கள் எடுத்த நிலையில் மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக ஜலஜ் சக்சேனா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 20 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய மகாராஷ்டிராவுக்கு பிரிதிவி ஷா 75 ரன்களை குவித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அர்சின் 34 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் 55*, சித்தேஷ் வீர் 55* ரன்கள் எடுத்த போது போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் இப்போட்டியில் முன்னிலைப் பெற்ற காரணத்தால் மகாராஷ்டிரா வெற்றிக்கு நிகராக 3 புள்ளிகளைப் பெற்றது. அதற்கு 91, 55* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோனது இதனால் தான் என நினைக்கிறேன் – மேத்யூ ஹைடன்

கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தால் அவர் வெளியேறியது சிஎஸ்கே தோல்விக்கு காரணமானது. தற்போது குணமடைந்துள்ள அவர் இராணிக் கோப்பையில் சதமடித்து தற்போது ரஞ்சிக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -