
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவான் அணியான சிஎஸ்கே அணி இந்த ஆண்டு இப்படி மோசமான தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமின்றி நிர்வாகத்தினர் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இருந்தாலும் இந்த 2025 ஐபிஎல் தொடரின் முதல் பாதிக்குப் பிறகு இரண்டாம் கட்டத்தில் இளம் வீரர்களின் வருகையால் சி.எஸ்.கே அணி சற்று பலம் அடைந்தது என்றே கூறலாம். ஏனெனில் ஆயுஷ் மாத்ரே டேவால்டு பிரேவிஸ், உர்வில் படேல் போன்ற ஒரு சில இளம் வீரர்கள் அணிக்குள் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
இதன் காரணமாக அவர்கள் சி.எஸ்.கே அணியின் எதிர்கால நட்சத்திரங்களாகவும் பார்க்கப்படுகின்றனர். காயமடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களாக அணியில் இணைந்த அவர்கள் அடுத்த ஆண்டு விளையாடுவார்களா? என்ற கேள்வி அதிகளவில் உள்ளது. அதோடு அடுத்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் கோப்பையை வென்று அவரை மரியாதையுடன் வழி அனுப்பவும் சிஎஸ்கே அணி சில திட்டங்களை தீட்டி வருகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு இளம் வீரர்கள் விளையாடுவாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த சீசனில் நான் காயமடைந்து வெளியேறியதற்கு பிறகு இளம் வீரர்கள் அணிக்குள் வந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை பலப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை அடுத்த ஆண்டும் விளையாட வைக்க நினைக்கிறோம்.
நான் காயமடைந்து வெளியேறிய பிறகு தோனி அவர்கள் கேப்டனாக செயல்பட்டது மகிழ்ச்சியான ஒன்று. எப்போதுமே எங்களுடைய ஆதரவு அவருக்கு இருக்கும். இந்த தொடரில் நான் வெளியேறிய பிறகு ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், பிரேவிஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டது அணிக்கு பலம் தான். அடுத்த ஆண்டு நானும் திரும்பும் போது நிச்சயம் எங்களது அணி மேலும் பலப்படும்.
இதையும் படிங்க : பும்ராவுக்கு இந்த விடயம் பிரச்சனையா இருக்காது.. அவர் கண்டிப்பா எல்லா மேட்சும் ஆடலாம் – கவாஸ்கர் நம்பிக்கை
சி.எஸ்.கே அணியின் எதிர்காலத்திற்கு இளம் வீரர்கள் நிச்சயம் தேவை என்றும் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு முன்பாக ஒரு சில வீரர்களை வெளியேற்றிவிட்டு நிச்சயம் இளம் வீரர்களை தக்க வைக்கும் திட்டத்துடன் சிஎஸ்கே உள்ளதை ருதுராஜ் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.