- Advertisement -
ஐ.பி.எல்

நமது அணியின் முதுகெலும்பாக இவர் மாறிவிட்டார்.. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ருதுராஜ் புகழாரம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது.

டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு பேசிய : ருதுராஜ் கெய்க்வாட்

பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியோடு சேர்த்து சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :

- Advertisement -

இந்த தொடர் துவங்கியதில் இருந்தே இது போன்ற வெற்றிகளை தான் எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் வேளையில் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக விளையாட துவங்கியுள்ளனர். சஞ்சு சாம்சன் எங்கள் அணியில் வந்ததிலிருந்து மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலம் கிடைக்க அவர் ஒரு உந்துதலாக இருக்கிறார்.

அதேபோன்று பந்துவீச்சிலும் தற்போது நாங்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். இன்னும் ஒன்று இரண்டு வெற்றிகளை பெற்று விட்டால் நிச்சயம் அதே நம்பிக்கையுடன் இந்த தொடர் முழுவதும் எங்களால் சிறப்பாக செல்ல முடியும். தற்போது வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க துவங்கி விட்டனர். குறிப்பாக பேட்டிங் துறையில் சஞ்சு சாம்சன் எங்களது அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 ஆவது போட்டியையும் தவறவிட்ட தல தோனி.. எப்போ தான் விளையாட வருவார்? – ருதுராஜ் கெய்க்வாட் பதில்

பந்து வீச்சிலும் அன்ஷுல் கம்போஜ் அற்புதமாக பந்துவீசி வருகிறார். அகில் ஹுசேன், ஜேமி ஓவர்டன் போன்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றனர். மெல்ல மெல்ல நாங்கள் தற்போது சத்தம் இல்லாமல் எங்களது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறோம். இது மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -