ஆஹா முழுசா தோனியாக மாறிய ருதுராஜ் கெய்க்வாட்.. புதிய அவதாரத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

Ruturaj Gaikwad
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்து நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நழுவ விட்டது.

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். சிஎஸ்கே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றிய தோனி தற்போது 42 வயதை தொட்டு விட்டார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எடுத்த இந்த முடிவு சென்னை அணிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

தோனி வழியில்:
ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றிவிட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தொடர் முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை பாண்டியா தலைமையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

மறுபுறம் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து போராடிய ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே 7 வெற்றிகளை பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்த ருதுராஜ் தலைமையில் சென்னை முதல் வருடம் ஓரளவு நன்றாகவே செயல்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா நகரில் எம்பிஎல் 2024 டி20 தொடர் நடைபெற்ற வருகிறது. அதில் ஜூன் 17ஆம் தேதி புனேரி மற்றும் சத்ரபதி அணிகள் மோதின.

- Advertisement -

அப்போட்டியில் புனேரி அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட துவக்க வீரராக மட்டுமே விளையாடிய அவர் தற்போது கேரியரிலேயே முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்யத் துவங்கியுள்ளார். குறிப்பாக இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் நேரத்தை வீணடிக்காம இதை செய்ங்க.. கேரி கிர்ஸ்டனுக்கு ஹர்பஜன் நெகிழ்ச்சியான அழைப்பு

அப்படியே விளையாடினாலும் அடுத்த வருடத்துடன் தோனி விடை பெறுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. எனவே மகத்தான விக்கெட் கீப்பரான தோனியின் இடத்தை சிஎஸ்கே அணியில் நிரப்புவதற்காக ருதுராஜ் இப்போதிலிருந்தே கீப்பிங் வேலையை துவங்கியுள்ளார். குறிப்பாக தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் அவர் கீப்பிங் செய்ய துவங்கியுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முழுமையாக தோனியை போல் ருதுராஜ் மாறி வருவது சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement