
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று தம்புலா நகரில் இந்திய ஏ அணி விளையாடியது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் :
48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 114 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் தேர்வாளர்கள் செய்த தவறையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்து – நீக்கப்பட்ட முன்னணி வீரர்
அதன் காரணமாக அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலி இடத்திற்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. துவக்க வீரரான ஜெய்ஸ்வாலை விராட் கோலி இடத்தில் தேர்வு செய்து தவறு என்றும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட தான் தகுதியானவர் என்பதையும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சதத்தின் மூலம் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.