- Advertisement -

அது எப்படி மாறுச்சுன்னு தெரியல.. வலுவா கம்பேக் கொடுப்போம்.. தோல்விக்கான 2 காரணம் பற்றி ருதுராஜ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51, விராட் கோலி 31, பில் சால்ட் 32, டிம் டேவிட் 22* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

சென்னை அணிக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3 விக்கட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 5, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 0, தீபக் ஹூடா 4, சாம் கரண் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மறுபுறம் போராடிய ரச்சின் ரவீந்திரா 41, சிவம் துபே 19 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

இறுதியில் ஜடேஜா 25, அஸ்வின் 11, தோனி 30* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 146-8 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது. இதன் வாயிலாக 2008க்குப்பின் 17 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை அணியை தோற்கடித்து பெங்களூரு சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2, லிவிங்ஸ்டன் 2, ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

இந்நிலையில் இப்போட்டியின் பிட்ச் தாம் கணித்ததை விட முதலில் பேட்டிங் செய்யும் போது மாறியதாக சென்னை கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மோசமான ஃபீல்டிங் செய்து எக்ஸ்ட்ரா 20 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமானதாக தெரிவிக்கும் அவர் அடுத்தப் போட்டியில் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:

“இப்போதும் நான் இந்த பிட்ச்சில் 170 ரன்கள் சராசரி என்று கருதுகிறேன். ஆனால் ஃபீல்டிங் துறையில் மோசமான நாள் அமைந்தது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது. இந்த பிட்ச்சில் நீங்கள் எக்ஸ்ட்ரா 20 ரன்களை சேசிங் செய்யும் போது வித்தியாசமாக பேட்டிங் செய்ய வேண்டும். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக நின்று வந்தது. அது எப்படி நடந்தது என்பது உண்மையாக எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க: 50 ரன்ஸ்.. சிஎஸ்கேவை கோட்டையில் மண்ணை கவ்வ வைத்து.. 17 வருட சோகத்தை மாற்றிய ஆர்சிபி சாதனை வெற்றி

“ராகுல் திரிபாதி, நானும் எங்கள் ஷாட்டுகளுக்கு ஆதரவு கொடுத்து சென்றோம். சில நேரங்களில் அது வேலை செய்யும் சில நேரங்களில் செய்யாது. இப்போதும் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்காதற்காக மகிழ்ச்சி. எங்களிடம் 3 உலகத்தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களை புதிய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை நீங்கள் விரும்பும். ஆனால் எதிரணிக்கு கடைசி வரை வேகம் நிற்கவில்லை. அடுத்ததாக கவுகாத்திக்கு பெரிய பயணம் செல்லவிருக்கிறோம். அங்கே மனதளவில் நாங்கள் மாற வேண்டும். ஃபீல்டிங் துறையில் நிறைய முன்னேற வேண்டும். வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்று கூறினார்.

- Advertisement -