- Advertisement -
ஐ.பி.எல்

இனிமேல் சிஎஸ்கே உன்னோட டீம்.. இந்த உதவி கூட செய்ய மாட்டேன்னு தோனி சொன்னாரு.. ருதுராஜ் பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் கேப்டனாக வெல்ல உதவினார்.

அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். மேலும் முழங்கால் வலியால் தோனி கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். அதன் காரணமாக விரைவில் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தோனியின் வார்த்தைகள்:

இந்நிலையில் இன்று முதல் இது உனது தலைமையிலான சிஎஸ்கே அணி என்று சொல்லி தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை தம்மிடம் ஒப்படைத்ததாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மேலும் களத்தில் அனைத்து விதமான முடிவுகளையும் நீ தான் எடுக்க வேண்டும் என்றும் தோனி கூறியதாகவும் கெய்க்வாட் கூறியுள்ளார். அந்த வகையில் சீனியராக இருந்தாலும் தோனி தமக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ருதுராஜ் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் ஐபிஎல் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக என்னிடம் வந்த எம்.எஸ். தோனி “இந்த வருடம் நான் தலைமைத் தாங்கப் போவதில்லை. நீங்கள் வழி நடத்தப் போகிறீர்கள்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் முதல் போட்டியில் இருந்தே நான் கேப்டனாக இருக்க வேண்டுமா? உறுதியாகத்தான் சொல்கிறீர்களா? என்று கேட்டேன்”

- Advertisement -

தோனியின் நம்பிக்கை:

“அந்த வகையில் கேப்டனாக தயாராக எனக்கு சில நாட்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் “இது உன்னுடைய அணி. நீ உன்னுடைய சொந்தமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஃபீல்டிங் செட் செய்வதில் 50 – 50 என்ற சூழ்நிலையில் கூட தலையிட மாட்டேன். அது போன்ற சூழ்நிலையில் உதவி செய்ய வேண்டிய நிலை வந்தால் கூட அதை நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று தோனி சொன்னார். அந்தளவுக்கு அவருடைய தன்னம்பிக்கையை பெற்றது எனக்கு தெரியுது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா வெற்றிக்கு தகுதியானவங்க.. அவங்க மாதிரி இந்த பழி சொல்ல விரும்பல.. ஆஸி கேப்டன் ஸ்மித் பேட்டி

அப்படி தோனியின் நம்பிக்கையை பெற்று கடந்த வருடம் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் தலைமையில் சென்னை ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் பெங்களூரு அணியிடம் நூலிலையில் சென்னை பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டது. எனவே இம்முறை 6வது கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்ப ருதுராஜ் தலைமையில் சென்னை தயாராகி வருகிறது.

- Advertisement -