
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 158 ரன்களை குவித்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணியானது விளையாடி வருகிறது.
இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்திலிருந்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணி சார்பாக அதிகபட்சமாக 60 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவர் அடித்த இந்த 74 ரன்கள் மூலம் சி.எஸ்.கே அணியானது ஓரளவு டீசன்டான ஸ்கோரை எட்டியது இல்லையென்றால் இன்னும் பெரிய வீழ்ச்சியை சி.எஸ்.கே அணி கண்டிருக்கும். இந்நிலையில் இன்றைய போட்டியின் போது 4 சிக்ஸர்களை அடித்த சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
குறிப்பாக எம்.எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராக சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : ரெய்னா, கே.எல் ராகுல், தோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
சி.எஸ்.கே அணிக்காக இதுவரை அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக தோனி 234 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து சுரேஷ் ரெய்னா 180 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷிவம் துபே 105 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் நான்காவது வீரராக சி.எஸ்.கே அணிக்காக இன்று 100 சிக்ஸர்களை ருதுராஜ் கெய்க்வாட் பூர்த்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.