- Advertisement -
ஐ.பி.எல்

KKR vs RR : சிறுவனை முரட்டு தனமாக தாக்கிய கொல்கத்தா வீரர் ரசல் பந்து – விவரம் இதோ

நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டாவதாக விளையாடியது. அப்போது 13 ஆவது ஓவரை ரசல் வீசினார். அந்த ஓவரை ரியான் பராக் எதிர்கொண்டார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தினை அவர் எதிர்கொள்ளும்போது பந்து வழக்கத்தை விட அதிகமாக பவுன்ஸ் ஆகி ரியான் தலையின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் சிறிது நேரம் கலங்கியபடி நின்றார் ரியான் களத்தில் இருந்த வீரர்கள் உடனடியாக அவரிடம் சென்று நலம் விசாரித்தனர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஆடிய ரியான் பராக் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி அழைத்து சென்றார். 17 வயதான ரியான் பராக் அவர் பங்குபெற்ற 4 ஆவது போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by