தெ.ஆ வீரர்கள் நாடு திரும்புவதில் ஏற்பட்ட பிரச்சனை. இன்னும் ஊருக்கு போகலையா அவங்க ? – விவரம் இதோ

rsa 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 12 ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

faf 2

- Advertisement -

அதனை தொடர்ந்து 15 மற்றும் 18ம் தேதிகளில் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் உண்டானதால் முன்னெச்சரிக்கை காரணமாக இவ்விரு போட்டிகளையும் பிசிசிஐ ரத்து செய்தது.

மேலும் தென் ஆப்பிரிக்க வீரர்களையும் பத்திரமாக அவரது நாடு திரும்ப ஏற்பாடுகளைச் செய்தது ஆனால் தற்போது விமான வழி போக்குவரத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்த உள்ளதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் துபாய்க்கு நேற்று சென்றனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை பெங்கால் கிரிக்கெட் வாரியம் செய்து தந்துள்ளது. மேலும் அவர்கள் துபாய்க்கு பாதுகாப்பாக சென்றடைந்தனர் என்ற தகவலும் அங்கிருந்து வெளியாகி உள்ளது. மேலும் துபாயிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு அவர்கள் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

மேலும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அது குறித்த நடவடிக்கைகளில் செய்துள்ளது. தென்ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியவர்கள் தங்கியிருந்த அறைக்கு மருத்துவக்குழு அனுப்பப்பட்டு அவர்களின் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிருமிநாசினிகள் போன்றவை அந்த அறைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

RSA

கொரோனா வைரஸ் தொற்று ஏதும் ஏற்படாமல் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் மைதானங்கள் மூடப்பட்டது. அதுமட்டுமின்றி பிசிசிஐ அலுவலகமும், பெங்கால் கிரிக்கெட் வாரியமும், மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் என அனைத்து அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement