- Advertisement -
உலக கிரிக்கெட்

ஐசிசி மகளிர் உ.கோ: 1992 முதல் 8க்கு 8 தோல்வி.. வரலாற்றை மாற்றி எழுதிய தெ.ஆ.. சரித்திரம் காணாத வெற்றி

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி அக்டோபர் 29ஆம் தேதி கௌகாத்தியியில் நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்கள் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தெனாப்பிரிக்காவுக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் இங்கிலாந்தை அதிரடியாக எதிர்கொண்டார்.

அவருடன் இணைந்து 116 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த டஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அசத்தியல் லாரா அரை சதத்தை அடித்த நிலையில் எதிர்புறம் வந்த ஆன்க் போஸ் 0, சுனே லஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் மாரிசன் காப் அதிரடியாக விளையாடி 42 (33) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

லாரா மாஸ் சதம்:

இந்தப் பக்கம் தொடர்ந்து இங்கிலாந்தை வெளுத்த கேப்டன் லாரா சதத்தை அடித்து அசத்தினார். மறுபுறம் சினலோ ஜாப்டா 1, அன்னேரி டெர்க்சென் 4 ரன்களில் அவுட்டாகி சென்றாலும் எதிர்புறம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய லாரா 20 பவுண்டரி 4 சிக்ஸருடன் 169 (142) ரன்கள் குவித்து அவுட்டானார். அதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீராங்கனையாக அவர் சாதனை படைத்தார்.

அவரை அனைத்து இங்கிலாந்து வீராங்கனைகளும் பாராட்டினர். இறுதியில் சோலே ட்ரையான் அதிரடியாக 33* (26), டீ க்ளெர்க் 11* (6) ரன்கள் கெடுத்ததால் 50 ஓவரில் தென்னாபிரிக்கா 316/7 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோபி எக்லெஸ்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 42.3 ஓவரில் 194க்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சரித்திரம் காணாத வெற்றி:

எமி ஜோன்ஸ், டம்மி பியூமோண்ட், ஹீதர் நைட் என டாப் 3 வீராங்கனைகளும் டக் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நட் ஸ்கீவர் 64, அலிஸ் கேப்சி 50 ரன்கள் எடுத்தார்கள். தெனாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மாரிசான் காப் 5 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இத்தொடரின் முதல் போட்டியிலல் இதே இங்கிலாந்திடம் 69க்கு ஆல் அவுட்டாகி தென்னாப்பிரிக்கா படுதோல்வியை சந்தித்தது. இன்று அதே அணியை இத்தொடரிலிருந்து தென்னாப்பிரிக்கா நாக் அவுட் செய்துள்ளது. அத்துடன் ஆடவர் (1992, 1999, 2007, 2015, 2023), மகளிர் (2000, 2017, 2022) என வரலாற்றில் இதற்கு முன் ஐசிசி உலகக்கோப்பை செமி ஃபைனல்களில் தென்னாப்பிரிக்கா 8 முறை விளையாடியுள்ளது.

இதையும் படிங்க: இதெல்லாம் பழகிடுச்சு.. அவங்கள தவிர்த்து இந்திய அணியில் யாருக்குமே நிலையான இடமில்லை.. சாம்சன் பேட்டி

அந்த 8 முறையும் நெஞ்சை உடைக்கும் தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா இன்று முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஆடவர் அணி சாதிக்கு முன் தென்னாப்பிரிக்கா சிங்கப் பெண்கள் மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை ஃபைனலுக்குச் சென்று வரலாற்றை மாற்றி எழுதி சரித்திரம் காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.

- Advertisement -