ஏர்போர்ட்டில் தவித்து நின்ற தெ.ஆ வீரர்கள். நாடு திரும்புவதில் ஏற்பட்ட சிக்கல். காரணம் இதுதான் – விவரம் இதோ

RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. பன்னிரண்டாம் தேதி துவங்க இருந்த முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

Ground-Dharamsala

அதனைத்தொடர்ந்து மீதமுள்ள இரண்டு போட்டிகள் 15 ஆம் தேதி மற்றும் 18ம் தேதி லக்னோ மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடைபெற இருந்தன. ஆனால் கொரோனா வைரஸின் தீவிரத் தன்மை காரணமாக இவ்விரண்டு போட்டிகளிலும் இந்திய அணி கைவிட்டது. அதற்கு காரணம் யாதெனில் தென்னாபிரிக்க நிர்வாகம் வைரஸின் தீவிரம் காரணமாக இப்போது போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

- Advertisement -

அதன்படி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் ரத்துசெய்து வீரர்களை தங்களது நாட்டிற்கு திரும்ப அனுப்புமாறு பி.சி.சி.ஐ யிடம் கேட்டுக் கொண்டது. அதனை ஒப்புக்கொண்ட பிசிசிஐ நிர்வாகமும் இரண்டு போட்டிகளையும் ரத்து செய்து அணி வீரர்களின் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தென் ஆப்பிரிக்க வீரர்களை அவர்களது நாட்டிற்கு செல்ல அனுமதித்தது.

IndvsRsa

ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் நாடு திரும்புவதில் பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஏனெனில் அவர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் விளையாட இருந்ததால் லக்னோவிற்கு சென்றனர். இந்நிலையில் லக்னோ நகரில் இருந்து நேரடியாக தென் ஆப்பிரிக்காவிற்கு வான்வழிப் போக்குவரத்து இல்லை என்ற காரணத்தினால் ஏகப்பட்ட இன்னல்களை அவர்கள் சந்தித்தனர்.

- Advertisement -

குறிப்பாக கொரோனா தாக்கத்தால் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதலில் லக்னோவில் இருந்து கொல்கத்தாவிற்கு விமான பயணம் மேற்கொண்டனர். அதன்பிறகு கொல்கத்தாவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை பிடித்தவர்கள் துபாய் சென்று மீண்டும் தென்னாப்பிரிக்க விமானத்தில் ஏறி தென்னாபிரிக்கா சென்றனர்.

rsa 1

கொரோனா தீவிரத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக தற்போது தென்ஆப்பிரிக்க வீரர்கள் பல சிக்கல்களுக்கு இடையில் தற்போது நாடுதிரும்பியுள்ளனர். மேலும் தற்போது இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement