அவ்ளோ செக்யூரிட்டி இருந்தும் தெ.ஆ வீரர்களுக்கு இந்திய பாடகியால் ஏற்பட்ட நிலை – 14 தனிமைப்படுத்திய அவலம்

rsa 2
- Advertisement -

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிலிருந்து தென்ஆப்பிரிக்கா திரும்பினாலும் அவர்களை கொரோனா வைரஸ் விடாது போலிருக்கிறது. ஆம், தற்போது இதன் மூலம் ஒரு பெரிய சர்ச்சையை உருவாகியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. இந்த ஒருநாள் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Dekock

- Advertisement -

தொடர் ரத்து செய்யும் அறிவிப்பு வரும்வரையில் ஒருவாரம் இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கியிருந்தனர். உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் பிரபலமான ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர். ஹோட்டலில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பிரபல பாடகி கனிகா கபூரும் இருந்துள்ளார்.

அவர் முன்னதாக இங்கிலாந்து சென்று திரும்பியுள்ளார். இங்கிலாந்து சென்று திரும்பியதை கூறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடும் ஒரு நிலை வரும் என்று தெரிந்ததால் இந்த விசயத்தை அதிகாரிகளிடம் மறைத்து இந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். பின்னர் ஒரு சில முக்கிய புள்ளிகள் கலந்துகொண்ட பார்ட்டிகளில் கலந்து கொண்டார் கனிகா கபூர்.

kanika

பின்னர் அவருக்கு பூரண வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அந்த ஹோட்டலில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் தென்ஆப்பிரிக்கா திரும்பினர். இதனால் தற்போதைய நிலைமை சீரியஸ் ஆகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் கனிகா கபூர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தான் தென்ஆப்பிரிக்க வீரர்கள் தங்கியிருந்தனர். தற்போது அவர்கள் தென்னாபிரிக்கா சென்று விட்டதால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு பிரபலமான பாடகியின் அலட்சியத்தால் இந்த வைரஸ் இன்னும் கொடூரமாக பரவக் கூடும் என்று தெரிகிறது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் எதுவும் இல்லை. இந்நிலையில் தேவையில்லாமல் கிரிக்கெட் வீரர்களின் மூலம் வைரஸ் பரவக்கூடாது என்று தெ.ஆ கிரிக்கெட் வாரியம் அனைத்து வீரர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement