14 நாட்கள் அவர்களை தனிமையில் வைத்து சோதனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விடாதீர்கள் – கிரிக்கெட் வாரியம் முடிவு

Rsa-3
- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் ரத்து செய்யப்பட்டு தொடரும் கைவிடப்பட்டது.

IndvsRsa

- Advertisement -

இதையடுத்து இந்தியாவில் தங்கியிருந்த தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்தியாவில் இருந்தனர். அதன்பின்னர் அவர்கள் தென்னாபிரிக்க நாட்டிற்கு பயணிப்பதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக நேற்று தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் லக்னோவில் இருந்து கொல்கத்தா சென்றனர்.

அதன்பின்னர் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக தங்களது தாயகமான தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டனர். இன்று காலை தென்னாப்பிரிக்காவுக்கு சென்றடைந்தஉடன் அவர்களை தீவிரமாக கண்காணிக்க தென்னாபிரிக்க அரசும் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் கரோனா வைரஸ் அவர்களுக்கு தாக்கி இருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தற்போது வரை தென்னாப்பிரிக்காவில் வைரசின் தாக்கம் இல்லை.

- Advertisement -

இவர்கள் மூலமாக தென்ஆப்பிரிக்காவில் வந்துவிட்டால் கட்டுப்படுத்துவது சிரமம் ஆகிவிடும். இதன் காரணமாகவே 14 நாட்கள் அவர்கள் தன்மையில் வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் பட்சத்தில் தென்னாபிரிக்க நாட்டில் அதற்கான பாதிப்பு இன்னும் ஏற்படவில்லை. எனவே முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு திரும்பும் அனைவர்க்கும் கொரோனா சோதனை நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement