பி.சி.சி.ஐ எடுத்த இந்த முடிவு மிகச்சரியானது. கங்குலியின் முடிவு எப்போதும் கரெக்ட் தான் – தெ.ஆ வாரியம் மகிழ்ச்சி

Dekock
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. 12 ஆம் தேதி துவங்க இருந்த இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மீதமிருந்த 2 போட்டிகளும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவியதால் ரத்து செய்யப்பட்டது.

IndvsRsa

- Advertisement -

இதன் காரணமாக ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருவழியாக கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து தென்னாபிரிக்க அணியில் இடம் பெற்ற வீரர்கள் தங்கள் தாயகமான தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பினார். மேலும், முன்னெச்சரிக்கை காரணமாக அந்த வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரை ரத்து செய்ததால் பல நூறு கோடிகள் இழப்பு ஏற்படும் என்று தெரியும். இருந்தாலும் வீரர்களின் நலன் கருதி இந்த ஒருநாள் தொடரை ரத்து செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நண்றி தெரிவித்துள்ளது.

Rsa-3

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாகி கூறியதாவது : எங்களது வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்த பிசிசிஐக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இது போன்ற பெரிய முடிவை எடுப்பது எளிதானதல்ல. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய நிதி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

- Advertisement -

ஆனால் வீரர்களின் நலன் மிகவும் முக்கியம் என்று அறிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார் அவர் முதலில் லக்னோ விமானநிலையத்தில் இருந்து கொல்கத்தா வந்து அங்கிருந்து துபாய் சென்றடைந்து அதன்பின்னர் பெரிய இன்னல்களுக்கு இடையே தென்னாபிரிக்க வீரர்கள் தங்களது தாயகத்தை அடைந்தனர்.

rsa 2

பி.சி.சி.ஐ இந்த தொடரை ரத்து செய்தது மட்டுமின்றி இந்த வருடம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரையும் இந்த மாதம் மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement