கொரோனாவிற்கு பிறகு இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் வெளிநாட்டு டி20 இதுதானாம் – பி.சி.சி.ஐ தீவிரம்

BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற இருந்த தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஆரம்பத்திலேயே ரத்து செய்யப்பட்டு தென்ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் அவர்களது நாட்டுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் அத்தகைய செயலுக்காக அப்போதே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் இந்திய நிர்வாகத்தை பாராட்டி இருந்தது.

IndvsRsa

இந்நிலையில் தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவில் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தொடருக்கான சாத்தியங்கள் உள்ளதாக நம்பிக்கையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் இந்த தொடரானது திட்டமிட்டபடி நடைபெறும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளதால் இம்முறை அந்த தொடரை எதிர்நோக்கியுள்ளது. மேலும் தற்போது கொரோனா பாதிப்பினால் வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்வது குறித்து எந்த ஒரு முடிவான தகவலும் வெளியாகவில்லை.

IND-2

தற்போது உள்ள அட்டவணைப்படி இந்திய அணி ஜூன் ஜூலை மாதங்களில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அந்த தொடருக்கு பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர், அதன் பின்னர் ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்து பயணம் என அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால் கொரானோ பாதிப்பின் காரணமாக தற்போது இரண்டு மாத கிரிக்கெட் காலியாகி உள்ளதோடு மேலும் வரவேற்கும் தொடர்களிலும் என்ற பாதிப்பு நீடிக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அதே போல ஏற்கனவே இந்தியாவில் நடக்க இருந்த தென்னாபிரிக்க தொடரும் பிசிசிஐ ரத்து செய்துள்ளதால் இந்த டி20 தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது. ஏற்கனவே எதிர்பார்ப்பில் உள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்ட் உடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இந்த தொடர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் தொடர் அமையும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது என ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளதால் அடுத்து நடைபெற இருக்கு கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement