
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்ற 10 அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு விலைக்கு வாங்கி தங்களது அணியை பலப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த மினி ஏலமானது ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவு கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த ஏலத்திற்கு பிறகு பல்வேறு வீரர்களின் அணி மாற்றம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மினி ஏலத்திற்கு முன்னதாகவே சில வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணி மாற்றம் செய்திருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய டிரேடிங் என்றால் அது சஞ்சு சாம்சன் மாற்றம் தான் என்று கூறலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் டிரேடிங் மூலம் ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கும் அணி மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இப்படி ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு சென்றதால் தற்போது ராஜஸ்தான் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே அந்த அணியின் இளம் வீரரான ரியான் பராக் சில போட்டிகளில் அந்த அணியை வழிநடத்தி உள்ளதால் அவருக்கும் துவக்க வீரரான ஜெய்ஸ்வாலுக்கும் இடையே கேப்டன்சி போட்டி கடுமையாக இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அவர்களை எல்லாம் தாண்டி அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா தான் கேப்டன் என்பது போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : ஜடேஜாவின் புகைப்படத்தோடு தளபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாக் பவுலருடன் மோதி சொதப்பிய பொல்லார்ட்.. 16 வருடம் கழித்து தோல்வி.. கரண் அணி சாம்பியன்
இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு அவரே தளபதியாக நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழி நடத்துவார் என்று தெரிகிறது. ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்து விளையாடி வரும் அவரது அனுபவம் ராஜஸ்தான் அணிக்கு உதவும் என்பதனாலே ராஜஸ்தான் அணி அவருக்கு கேப்டன் பதவி வழங்கலாம் என்றும் தெரிகிறது.