நெருங்கிய நண்பராக இருந்தும் தோனி எதுக்கு உதவிலை. அணித்தேர்வில் நியமாகவே இருப்பார் – முன்னாள் வீரர் பேட்டி

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஆர் பி சிங். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய போது முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். 2007-ம் ஆண்டிற்கு பின்னர் இவர் பெரிதாக இந்திய அணிக்கு ஆட முடியவில்லை. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின்போது இவரைத்தான் அழைத்துச் செல்லலாம் என பலரும் கருதினர்.

Rp-singh

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் இர்பான் பதானை அணியில் சேர்த்தார். மேலும், வழக்கத்திற்கு மாறாக பத்திரிக்கைகள் அனைத்தும் இர்பான் பதானிற்குப் பதிலாக ஆர்பி சிங்கைத்தான் தோனி சேர்க்க இருந்ததாக செய்திகளை வெளியிட்டன .இதற்கு தோனி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் வீரர்கள் தேர்வில் தோனி சரியான ஒரு கேப்டன் என்று தெரிவித்துள்ளார் ஆர் பி சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வீரர்களை தேர்வு செய்யும்போது தோனி மிகவும் நடுநிலையாக இருந்தார். அவரது சிறந்த நண்பன் நான். ஆனால் ஒரு நண்பனாகவும் எனக்கு கேப்டனாகவும் சரியான ஒரு நபராக இருந்தார் .

RP singh

அணியில் என்னை தேர்வு செய்யாவிட்டாலும் என்னிடம் வந்து தனியாக பேசுவார். ஒரு நண்பனாக எனக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பார். மேலும், அணியில் இருந்து என்னை நீக்கி விட்டாலும் ஒரு நண்பனாக என்னிடம் சரியாக பழகுவார். அது குறித்து எனக்கு எப்போதும் வருத்தம் இருந்தது . இருப்பினும் என்னுடைய விளையாட்டை எப்படி மேம்படுத்துவது என்று அடிக்கடி எனக்கு சொல்லித் தருவார்.

- Advertisement -

மேலும் தோனிக்கு இயல்பாகவே போட்டிகளை கணிக்கும் திறமை இருந்தது என்றும் கூறியுள்ளார் ஆர்பி சிங். இவர் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள் 50 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆர்.பி.சிங் தோனியின் தலைமையில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rp Singh 1

தோனி சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருந்தாலும் அவர் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் தினமும் அவர் குறித்த சுவாரசிய தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

Advertisement