தோனி பினிஷர் என்பது நமக்கு தெரியும். ஆனா அவர் விரும்பி விளையாட ஆசைப்பட்ட இடம் எது தெரியுமா ? – ஆர்.பி சிங் பேட்டி

- Advertisement -

தோனி ஓய்வு பெற்றபின்னர் அவருடன் ஆடிய வீரர்கள் பலர் அவருடன் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பற்றி தற்போது வெளியே கூறி வருகின்றனர். இதில் எதிர் அணியில் விளையாடிய வீரர்கள் கூட தோனிக்கு எதிராக நடந்த சில சம்பவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தோனியின் நண்பரும் முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர் பி சிங், தோனி எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் எனவும், அவர் இந்திய அணியில் எந்த இடத்தில் விளையாட விரும்பினார் என்பது குறித்தும் தெளிவாக பேசி இருக்கிறார்.

Rp Singh 1

- Advertisement -

அது குறித்து அவர் கூறுகையில்… தோனி மிகச்சிறந்த பினிஷர் நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆனால் இந்திய அணிக்காக ஆடும் போது அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவே அதிகம் விளையாட விரும்பினார். இதனை அவர் ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருக்கிறார்

அவருக்கு நான்காவது பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்தது. ஆனால் பெரும்பாலும் ஐந்து மற்றும் ஆறாவது இடத்திலேயே அணியின் சூழ்நிலை காரணமாக விளையாடி இருக்கிறார். அவருக்கு நிகர் அவரே. இதுபோன்ற அணிக்காக பல விசயங்களை விட்டுக் கொடுத்துதான் விளையாடினார் தோனி.

dhonispartan

தோனி ஆடவேண்டிய மூன்றாம் இடத்தை விராட் கோலி வந்தவுடன் அவருக்கு கொடுத்தார். அதேபோல் நான்காம் இடத்தையும் வரும் இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுத்தார் .யுவராஜ்சிங் தொடர்ந்து நான்காம் இடத்தில் ஆடி வந்தார். மேலும் அணியின் நன்மைக்காக அவர் எந்த இடத்திலும் களமிறங்க தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து துவக்கத்தில் களமிறங்கி இருந்தால் தோனி கிட்டத்தட்ட 15,000 ஒருநாள் ரன்கள் குவித்து இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனை பலரும் சமீப காலமாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement