தனது செல்லப்பிள்ளையான ரெய்னா மீது கோபம் கொண்ட தோனி – சுவாரசிய தகவலை பகிர்ந்த ஆர்.பி.சிங்

Raina

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்திய அனைத்து உலக கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். நெருக்கடியான சூழலிலும் அவரது பதட்டமடைந்த இயல்பான சிந்தனை வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவது அவரது ஸ்டைல்.

7

அவரின் இந்த அமைதியான குணத்தினால் அவரை எல்லோரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். தோனி பெரும்பாலும் தனது உணர்ச்சிகளை மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி அதிகமாக வெளிப்படுத்த மாட்டார். அப்படியே கோபம் வந்தாலும் அது அரிதினும் அரிதாகத்தான் பார்க்கப்படும் அந்த வகையில் தற்போது தனது செல்லப் பிள்ளையான ரெய்னாவின் மீது தோனி கோபப்பட்ட விடயம் குறித்து ஆர்பிதிங் பகிர்ந்துள்ளார்.

தோனி கோபப்பட்டு சில செயல்களை செய்துள்ளார் எனில் அவைகளில் குறிப்பிடத்தக்கவை : 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அம்பயர் பில்லி பவுடன் உடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நோபால் சர்ச்சையில் அம்பயர்களுடனான வாக்குவாதம் மற்றும் மணிஷ் பாண்டே இரண்டாவது வராததால் அவரை தீட்டியது என சில சம்பவங்களே உள்ளன.

Raina-5

மேலும் ஐ.பி.எல் தொடரில் தீபக் சாஹர் மீதான கோபம் என அரிதிலும் அரிதாகவே அவர் கோபப்பட்டு பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அவரது பேச்சைக் கேட்காத ரெய்னாவை கண்டித்தது குறித்தும் தோனி கோபமடைந்த விடயம் குறித்து ஆர்பி சிங் ஒரு சிறிய விடயத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

Dravid

இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ரெய்னா கவர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரெய்னா பந்து வீசுவதற்கு முன் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார் அதனை கவனித்த தோனி முன்னால் வரவேண்டாம் என்று கூறினார். ஆனால் அதனைக் கேட்காத ரெய்னா முன்னோக்கி வந்ததால் ஒரு பந்தை கோட்டைவிட்டார். அதனை அடுத்து ரெய்னாவை நோக்கி தோனி பின்னால் போ என்று கத்திக்கொண்டே அதட்டினார் தோனி என்று ஆர்.பி சிங் கூறினார்.