தோனியால் முன்பு போல இப்போது இதனை செய்ய முடியவில்லை. அதுவே அவர் ஓய்வை அறிவிக்க காரணம் – ஆர்.பி.சிங் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து இரண்டு வாரங்கள் ஆன பின்பும் கூட இன்னும் அவர் குறித்த செய்திகள் நின்றபாடில்லை. ஓய்வை அறிவித்த தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

Dhoni

ஐபிஎல் தொடரும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் தோனி குறித்து அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் cricket.com என்கிற இணையதளத்திற்கு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : டி20 போட்டிகளில் தோனி ஒரு அசாத்தியமான வீரர்.

- Advertisement -

அதனால்தான் அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக காத்திருந்தார். ஆனால் அவரது கிரிக்கெட்டையும் மீறி அவரது உடல் தகுதி மற்றும் வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த 15 மாதங்களாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று கூறியிருந்தார்.

Dhoni

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையில் தோனி நான்காவதாக களமிறங்கி பேட்டிங் செய்வே விரும்பினார்.ஆனால் அணி நிர்வாகம் அவரை கடைசியிலே விளையாட வாய்ப்பு கொடுத்தது. அதுவும் அரையிறுதிப் போட்டியில் தான் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

dhoni 2

முன்புபோல் போட்டியை தோனியால் பினிஷிங் செய்ய முடியவில்லை. அதுவே அவர் கிரிக்கெட்டில் இருந்து விலக எச்சரித்து இருக்கும் என்று தான் கருதுவதாக ஆர் பி சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement