நல்ல வேளை கோலி கையால இது நடக்கல அதுவரைக்கும் சந்தோஷம். நக்கலாக பேசிய – ராஸ் டெய்லர்

Taylor
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Southee-3

இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 35-வது ஓவரை இந்திய அணியின் கேப்டன் கோலி வீசினார். அப்போது ராஸ் டைலர் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

- Advertisement -

அந்த ஓவரின் 4வது பந்தில் நிக்கோலஸ் பவுண்டரி அடிக்க மற்ற 5 பந்துகளையும் தடுத்து ஆடினார். அடுத்த ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி பொதுவாக பந்து வீசுவது கிடையாது தற்போது இந்தப் போட்டியில்தான் மீண்டும் பந்துவீசினார்.

Taylor-2

இதனை கிண்டலடிக்கும் விதமாக பேசிய ராஸ் டெய்லர் கூறுகையில் : இந்திய அணியுடனான தொடர் சிறப்பாக அமைந்தது. எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதுமே கடினமான எதிராளியாக திகழ்கிறார்கள். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அதிலும் குறிப்பாக கோலியின் பந்துவீச்சில் வெற்றிக்கான ரன்களை அடிக்காமல் இருந்தது மிகவும் மகிழ்ச்சி என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement