எத்தனை வயது ஆனா என்ன ? 2023 உலககோப்பையில் விளையாடுவதே என் விருப்பம் – நியூசி வீரர் அதிரடி

Nz
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை, ஒருநாள் வீரர் வீராங்கனை என அனைவரையும் தேர்வு செய்து அவர்களுக்கான பரிசுகளை கொடுத்து வருகிறது. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பரிசளிப்பு நிகழ்வு வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது.

Taylor-3

- Advertisement -

இதில் இந்த வருடத்தின் சிறந்த வீரராக அந்த அணியின் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 2 சதம் 9 அரைசதம் உட்பட 1389 ரன்கள் குவித்துள்ளார் ராஸ் டைலர். முன்னதாக 2015 மட்டும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிகளில் இவர் ஆடி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரிலும் கலந்து கொள்ள விருப்பம் என்று தெரிவித்துள்ளார் அவர்.இதுகுறித்து அவர் கூறுகையில் : 2019 மற்றும் 20 வருடம் ஏற்றம் இறக்கம் நிறைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிகயில் ஆடினேன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஆடினேன்.

Taylor

நியூசிலாந்து வீரர்களை அர்ப்பணிப்பான ஆட்டம் எப்போதும் மறக்க முடியாதது.நானும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் என்னிடம் இல்லை. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை.

- Advertisement -

எனக்கு வயது அதிகரித்து கொண்டிருப்பதை உணர்கிறேன். ஆனால் வயது வெறும் நம்பர் மட்டுமே. 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் வரை என்னால் தொடர்ந்து ஆட முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் டெய்லர். தற்போது இவருக்கு 36 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Taylor 2

இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடர் நடைபெறும்போது அவருக்கு 39 வயதாகி இருக்கும். அதனால் அவர் அந்த உலககோப்பையில் விளையாடுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும அவர் விளையாட ஒத்துழைத்தாலும் அவரது உடற்தகுதி ஒத்துழைக்குமா என்பதும் அந்த அணி நிர்வாகம் அவரை தேர்ந்தெடுக்குமா ? என்பதையும் பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே பதில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement