அவரின் நிலைமையை புரிஞ்சிக்காம பேசியது தப்பு. சக வீரரிடம் மன்னிப்பு கேட்ட ஜோ ரூட் – விவரம் இதோ

Ali
- Advertisement -

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் இங்கிலாந்து அணிக்குள் மீண்டும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர் மொயின் அலி நீக்கப்பட்டு இருக்கிறார். அதனால் இவர் இங்கிலாந்து திரும்புகிறார்.

Archer

- Advertisement -

இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்டில் மட்டும் விளையாடிவிட்டு இவர் இங்கிலாந்து திரும்புவது சர்ச்சையானது. இதுகுறித்து நேற்று பேட்டி அளித்த ஜோ ரூட், மொயின் அலி இங்கிலாந்து திரும்புவது அவரின் சொந்த முடிவு. இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. ஆனாலும் அவரின் முடிவை மதிக்கிறோம். அவரை அணியுடன் இருக்கும்படி நாங்கள் கூற முடியாது. அவர் பயோ பபுளில் இருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை கட்டாயப்படுத்த கூடாது, என்று ஜோ ரூட் கூறினார்.

இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. கொரோனா பயோ பபுளில் வீரர்கள் நீண்ட காலம் இருப்பதால்தான் ஒவ்வொரு வீரருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனால்தான் பேர்ஸ்டோ, பட்லர் போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேபோல்தான் மொயின் அலியும் ஓய்வு எடுக்க விரும்புகிறார். அதிலும் இவர் டிசம்பர் இறுதியில் இருந்து பயோ பபுளில் இருக்கிறார். இடையில் கொரோனா வேறு இவருக்கு வந்து சென்றது. இதனால் இவர் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார். இதில் என்ன தவறு என்று பலரும் கேட்டுள்ளனர்.

ali 1

இந்நிலையில் ஜோ ரூட் பேட்டியை இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர். ஐபிஎல்லை கருத்தில் கொண்டு இவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் வருகிறது. இப்போது அலி தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் இணைந்தால் ஐபிஎல்லில் விளையாடுவது கஷ்டம். இதை மனதில் வைத்து அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார்.இதைத்தான் ரூட் விமர்சனம் செய்யும் வகையில் பேசி உள்ளார். இதுவே தற்போது இங்கிலாந்து அணிக்குள் புதுப் பிரச்னையை உருவாக்கி உள்ளது.

ali 2

இதனைத் தொடர்ந்து ரூட்டுக்கு ஆதரவாகவும், அலிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொயின் அலியிடம் ரூட் நேற்று மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று சென்னையில் மொயின் அலி தங்கியிருந்த அறைக்கு சென்ற ரூட் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களைப் தவறாக பேசிவிட்டேன், நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று மொயின் அலியிடம் கூறி மன்னிப்பு கோறியுள்ளார்.

Advertisement