முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டன்.

rohitsharma
- Advertisement -

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்தவுடன் வரும் மார்ச் 6முதல் 18ம் தேதிவரையிலும் இந்தியா இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

rohit

- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மார்ச் 6ம் தேதியன்று மோதுகின்றன.

இந்நிலையால் முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ரோஹித் சர்மா, தவான், கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூட, வாசிங்டன் சுந்தர், சாஹல், அக்சர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாட்கட், முகமது சிராஜ், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

RohitSharma

விராட்கோலி மற்றும் தோணி உள்ளிட்ட சீனியர்களுக்கு தொடர் போட்டிகளின் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது.இந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக ஷிகர் தவானும் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement