ஜடேஜாவை நான் அடிக்க நினைத்தது உண்மைதான்..! மனம் திறந்த ரோஹித்..!

rohit-jadeja

இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியுற்ற போதும் , ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றது. இந்த சுற்று பயணத்தின் போது நடந்து சுவாரஸ்யமான சம்பவத்தை இந்திய அணியின் ஹிட் மேன் என்றழைக்கபடும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

rhohitsharma

கடந்த ஜனவரி மாதம் இந்திய அணிய தென் னாப்பிரிக்கா சென்ற போது, இந்திய அணியின் ரோஹித் மற்றும் ஜடேஜா அவர்களது மனைவிகளுடன் தென்னாப்ரிக்காவில் உள்ள காடுகளை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். சபாரி என்றழைக்கப்படும் ஒரு விதமான பயணத்தில் இவர்கள் தென்னாப்ரிக்காவில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். பொதுவாக சபாரி சவாரியில் செல்லும் போது வன விளங்குகளை மிக அருகில் காண முடியும், இதில் சில ஆபத்துகளும் இருக்கின்றது.

அதேபோல தான் இந்த சபாரி சவாரியில் இவர்கள் காட்டின் நடுவே சென்று கொண்டிருந்த போது இவர்கள் அனைவரும் இரு சிறுத்தைகளை கண்டுள்ளனர். அதில் ஒரு சிறுத்தை ஒரு இரையை தனது வாயில் கவ்விக்கொண்டு இருந்துள்ளது. இந்த காட்சியை அனைவரும் மிக பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ஜடேஜா மட்டும் விளையாட்டு தனமாக இருந்துள்ளார். தீடீறென்று ஜடேஜா சிறுத்தையின் கவனத்தை ஈர்க்க சத்தமிட்டுள்ளார்.

jadeja

அவர் சத்தமிடத்துடன் அங்கிருந்த சிறுத்தை அவர்களை பார்த்துள்ளது. இதனால் பயந்து போன ரோஹித் ஷர்மா அந்த நேரத்தில் ஜடேஜாவின் முகத்தில் குத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஜடேஜா சத்தமிட்டதும், தான் அவரை முறைத்து பார்த்ததாகவும் அதனை அறிந்து பின்னர் அவர் அமைதியாகி விட்டதாகவும் ரோஹித் அந்த போட்டியில் கூறியுள்ளார். இதனால் அன்று முதல் இனிமேல் ஜடேஜாவுடன் செல்லவே கூடாது என்ற ஒரு முடிவையும் ரோஹித் எடுத்து விட்டாராம்.