INDvsNZ : டாஸ் வென்ற கேப்டன் ரோஹித். இந்தியா முதலில் பவுலிங் – ஒரு புதிய வீரர் அறிமுகம்

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி தற்போது ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் சற்று முன்னர் நடைபெற்ற டாஸிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

INDvsNZ 1

- Advertisement -

அதன்படி தற்போது நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் ? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரே ஒரு அறிமுக வீரருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டர் வரிசையில் இன்று 6-ஆவது வீரராக களம் இறங்குகிறார்.

அவரை தவிர்த்து ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுகின்றனர். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோரும் 3 வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

venkatesh

முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சூர்யகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) அஷ்வின், 8) அக்சர் படேல், 9) தீபக் சாகர், 10) புவனேஷ்வர் குமார், 11) முகமது சிராஜ்.

Advertisement