ரோஹித்துக்கும் கோலிக்கும் சண்டையா ? கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரோஹித் – வைரலாகும் பதிவு

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. கோலியின் சாதனைகளை நாம் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது கிடையாது. சச்சின் படைத்த அனைத்து சாதனைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் துணைக்கேப்டனும் தற்போதைய டி20 கேப்டனுமான ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் விராட் கோலி குறித்து ரோஹித் சர்மா குறிப்பிட்டதாவது : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என்றும் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் கோலிக்கும் ரோஹித்துக்கும் சண்டை, அணியில் கேப்டன் மாற்றம் நிகழும் என்று தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் அவர்கள் அதனை தொடர்ந்து மருத்துவந்தனர். மேலும் தற்போது ரோஹித்தின் இந்த பதிவு அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது என்றும் அவர்கள் நல்ல பிணைப்பில் உள்ளனர் என்றும் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.