இன்றைய போட்டியிலும் சர்ப்ரைஸ் முடிவுடன் காத்திருக்கும் ரோஹித் – விவரம் இதோ

Rohith-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

Toss

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியில் ஒரு மாற்றத்தை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதன்படி தொடர்ந்து சொதப்பலாக பந்து வீசி வரும் கலீல் அகமதுக்கு பதிலாக ஷர்துல் தாகூரை இந்த போட்டியில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் ரோஹித் இந்த முடிவை இறுதிப்போட்டியில் உறுதி செய்வாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் டெல்லி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தும் அடுத்த ராஜ்கோட் போட்டியில் அதே அணியுடன் களமிறங்கி இந்திய அணி வெற்றி பெற்றது. ஒருவேளை முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் மூன்றாவது போட்டியில் சோதனைக்காக சில வீரர்களை இந்திய அணியில் மாற்றம் செய்து இருப்பார்.

Ind

ஆனால் சென்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி மாற்றமில்லாமல் களமிறக்கி வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டியிலும் அதே அணியுடன் இந்தியா களமிறங்க உள்ளதாக தற்போது ரோகித் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே இன்றைய போட்டியில் டாசுக்கு பிறகு இந்திய அணியில் மாற்றமில்லாமல் சர்ப்ரைஸ் ஆக ரோஹித் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -