இவரின் அருமை இப்போதுதான் புரிகிறது. நிச்சயம் இந்திய அணிக்கு இவர் தேவை – ரோஹித் பாராட்டு

Rohith-2
- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

ban 2

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களும், பண்ட் 27 ரன்கள் குவித்தனர். மேலும் இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதல் டி20 போட்டி வெற்றி இதுவாகும். இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : நாங்கள் எடுத்தது வெற்றிக்கு போதுமான ரன்கள் என்று நினைக்கிறேன்.

Chahal

இந்த போட்டியை பொறுத்தவரை சாகல் டி20 தொடருக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்று தெரிகிறது அவரின் வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் மேலும் அணியின் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அதனைக் கண்டித்து அவர் விக்கெட்டுகளை எடுக்கிறார் மேலும் முக்கியமானவர்களில் பேட்ஸ்மேன்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக அறிந்து அதற்கு ஏற்றார்போல் பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும் விதமாக அவர் பந்து வீசுகிறார் அவர் இந்த போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார் இது கேப்டனுக்கு ஏதுவாக அமையும் என்று ராகுல் ரோஹித் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது

Advertisement