என் கைகள் துடிக்கிறது. சீக்கிரம் களமிறங்கி அதிரடியில் பின்னி எடுக்கனும் – நட்சத்திர வீரர் அதிரடி பேட்டி

Ind-2
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருக்கும் வீரர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மூலமாக ரசிகர்களிடையே உரையாடி வருகின்றனர். மேலும் சிலர் இன்ஸ்டாகிராம் வழியாக மற்ற வீரர்களுடன் லைவாக பேசி வருகின்றனர்.

Rohith

- Advertisement -

இதைப்போலவே இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ரோகித் சர்மாவுடன் கலந்துரையாடி வருகின்றனர். அப்போது ஜாலியாக பல்வேறு விஷயங்களை ரோகித் சர்மா அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பிடத் தக்கவையாக : 2013ம் ஆண்டு ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக அறிமுகமானதை குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

மேலும் தற்போது தான் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்வதில் சற்று சிரமம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உள்ளரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்களெல்லாம் நெரிசலாக காணப்படுகின்றன.

Rohith-2

எனவே அப்பார்ட்மெண்ட் விட்டு வெளியே வர முடியாது. மும்பையில் விளையாட்டு பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு விலையெல்லாம் மிகவும் அதிகம் நான் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு எனது பயிற்சியாளர் கூறியபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.

Rohith-2

உடற்பயிற்சிக் கூடங்களை விரைவில் திறப்பார்கள் அப்போது அங்கு சென்று பயிற்சி மேற்கொள்வேன். என்னுடைய பேட்டிங் பயிற்சியையும் ஆட்டத்தையும் மிஸ் செய்கிறேன் மேலும் நான் மைதானத்திற்கு சென்று அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement