நீ தான் அடுத்த பும்ரா. உன்னை அப்படிதான் யூஸ் பண்ண போறேன் என்று கூறிய ரோஹித் – யாரை சொல்லி இருக்காரு பாருங்க

Rohith-1
- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அதிரடியால் சற்று ஆட்டம் கண்டது என்றே கூறலாம். அதன்பின் இடைவெளியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு அதை காண முடிந்தது. அதன் பின்னர் இந்திய வீரர்கள் எழுச்சி கொண்டு சிறப்பாக பவுலிங்கில் மிரட்ட இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Deepak-Chahar

- Advertisement -

இந்நிலையில் பிரேக்கில் தீபக் சாகரிடம் சென்ற கேப்டன் ரோகித் சர்மா : இன்று உன்னை தான் பும்ரா போல் யூஸ் பண்ண நினைக்கிறேன். டெத் ஓவர்களில் உன்னை பயன்படுத்தப் போகிறேன். நீ தயாராகி கொள் என்றார். மேலும் நெருக்கடியில் உனக்கு நான் அளிக்கும் பொறுப்பு உன்னை அதிகம் ஊக்கப்படுத்தும். எனவே நீ நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது உன் நம்பிக்கையை நீ இழக்கும்போது மோசமாக செயல்படுவாய். அதேபோல் நீ நம்பிக்கையுடன் செயல்பட்டால் உன்னால் சாதிக்க முடியும் என்று கூறினாராம்.

அதன் பின்னர் கேப்டன் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக நான் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி செயல்பட்டதால் என்னால் இக்கட்டான நேரத்திலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடிந்தது.

Chahar

மேலும் எனது கடின உழைப்பு நான் இனி வரும் போட்டிகளில் காண்பிக்க உள்ளதால் என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைத்து பந்து வீசியதால் நான் சிறப்பாக பந்துவீசினேன் என்று தீபக் சஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement