முதல் 3 பந்துகளில் சிக்ஸர் அடித்தபின் இதையே நினைத்தேன் – ரோஹித் பேட்டி

Chahal-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

Dhawan

அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து அதன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த 85 ரன்களில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். அதிலும் குறிப்பாக 10 ஓவரை வீசிய வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளரான மோசடெக் வீசிய அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து சிக்ஸரை அடித்தார். இதுகுறித்து போட்டி முடிந்து ரோஹித்திடம் சாஹல் பேட்டி எடுத்தார்.

அதில் ரோஹித் குறிப்பிட்டதாவது : முதல் 3 பந்துகளை சிக்ஸர்களை அடித்ததும் மீதம் உள்ள பந்துகளையும் சிக்ஸர் அடிக்கவே நினைத்தேன். ஆனால் 4 ஆவது பந்து சரியாக கனெக்ட் ஆகவில்லை. இல்லையென்றால் அந்த ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களையும் அடித்திருப்பேன் என்று ரோஹித் கூறினார்.

- Advertisement -